உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப்

சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப்

மலையாள திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராகவும் தற்போது பிஸியான நடிகராகவும் மாறியவர் பஷில் ஜோசப். மூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ள இவர், மூன்றாவதாக இயக்கிய மின்னல் முரளி திரைப்படம் சூப்பர்மேன் கதையம்சத்துடன் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதன்பிறகு டைரக்ஷன் பக்கம் செல்லாமல் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பஷில் ஜோசப். அதேசமயம் ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து சக்திமான் படத்தை இயக்கப் போவதாக சில வருடங்களுக்கு முன்பு சொல்லி இருந்தார். அதன்பிறகு அதுகுறித்த அப்டேட் எதுவும் இல்லை.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் சமீபத்திய பேட்டி ஒன்றில் பஷில் ஜோசப் பற்றி கூறும்போது, “ஒருமுறை பஷில் ஜோசப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது சக்திமான் படத்திற்காக கதையை தயார் செய்து இரண்டு வருடங்களை வீணடித்து விட்டேன். எப்படி பாலிவுட்டில் நீங்கள் சமாளிக்கிறீர்கள்? என்னால் முடியவில்லை வெளியேறி விட்டேன்” என்று கூறினார். நானும் அவரிடம் என்னாலும் சமாளிக்க முடியவில்லை, நானும் பாலிவுட்டில் இருந்து வெளியேறத்தான் போகிறேன் என்று சொன்னேன்” என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் ரன்வீர் சிங்கின் சக்திமான் படம் தற்போது கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. சமீபத்தில் பஷில் ஜோசப் புதிதாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியபோது அதற்கு ரன்வீர் சிங் வாழ்த்து சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !