வாசகர்கள் கருத்துகள் (1)
ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தால் பிரச்சனைகள் தீர்ந்து இருக்கும்.
பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் 2022ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛சர்தார் 1'. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் கூட்டணியில் சர்தார் 2 படம் உருவாகி உள்ளது. எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் , ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர், பேங்காக் போன்ற பல வெளிநாடுகளில் நடந்து முடிந்துள்ளது. இன்னும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை வியாபாரம் ஆகாமல் இருக்கிறது. இதனால் இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே கார்த்தி நடித்துள்ள ' வா வாத்தியார்' படம் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தால் பிரச்சனைகள் தீர்ந்து இருக்கும்.