100 கோடி லாபத்தில் 'லோகா'
டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'லோகா சாப்டர் 1 சந்திரா' திரைப்படம் 300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மலையாளத் திரையுலகத்தில் வசூலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்த இந்தப் படம் தற்போது 280 கோடி வசூலைக் கடந்துள்ளது.
சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்தின் தியேட்டர் உரிமை வியாபாரம் சுமார் 26 கோடிக்கு நடந்துள்ளது. படத்தின் மொத்த வசூலான 280 கோடியில் பங்குத் தொகை மட்டும் 120 கோடி. அதில் தியேட்டர் உரிமை விலை போக 100 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. தியேட்டர் வசூலிலேயே படத்தின் முதலீடு வந்துவிட்டதால், அதன் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை தயாரிப்பாளருக்கு நேரடியாகப் போய்ச் சேரும்.
எதிர்பாராத ஒரு வசூலை இப்படம் பெற்று மற்ற திரையுலகினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.