உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன்

'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன்


தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படமான 'மிராய்' படம் 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. படத்தைப் பாராட்டி பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனும் பாராட்டியுள்ளார். பொதுவாக சிறிய பதிவுகளை மட்டுமே சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அல்லு அர்ஜுன் இந்தப் படத்திற்காக நீண்ட பதிவிட்டுப் பாராட்டியுள்ளார்.

“மிராய் குழுவிற்கு வாழ்த்துகள். உணர்ச்சியுடனும், உணர்வுடனும் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சகோதரர் தேஜா சஜ்ஜா, உங்கள் உடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மரியாதை. இது போன்ற திரைப்படத்தை உருவாக்கியதற்குப் பெரிய பாராட்டு. மஞ்சு மனோஜ் நீங்கள் அசத்திவிட்டீர்கள். ரித்திகா நாயக்கின் இனிமையான இருப்பும், அன்பான ஸ்ரியா சரண், ஜெபகதிபாபு காரு, மற்றும் பிறரின் சக்தி வாய்ந்த இருப்பும் பாராட்டுக்குரியது.

இந்தத் திரைப்படத்தின் தொழில்நுட்பம் அற்புதம். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பாராட்டு. குறிப்பாக சிஜி குழு, கலை, மிக்சிங் மற்றும் கவுர ஹரியின் பயமுறுத்தும் இசை. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனியின் சினிமா பார்வைக்கு மரியாதை. மிகவும் பாராட்டத்தக்க வேலை. புதிய யுக வணிக இயக்குனருக்கான அடையாளம். பெரிய வாழ்த்துகள் தயாரிப்பாளருக்கு,” எனப் பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !