முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி'
சுஜித் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பவன் கல்யாண், பிரியங்கா மோகன், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'ஓஜி' தெலுங்குத் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு எதிர்பார்ப்புக்கும் அதிகமாக உள்ளது. இதுவரையில் சுமார் 75 கோடிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் மட்டும் 3 மில்லியன் யுஎஸ் டாலருக்கு முன்பதிவு ஆகியுள்ளது.
இப்படத்திற்கான பிரிமியர் காட்சிகளுக்கு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ரூ.1000 வரை வசூலித்துக் கொள்ள அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. அவற்றிற்கான முன்பதிவு முடிந்தால் வசூல் தொகை இன்னும் அதிகமாகலாம். இப்போதுள்ள நிலவரப்படி முதல் நாள் வசூலாக 100 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் இயக்குனர் சுஜித் இயக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்பு 2019ல் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ', 2014ல் 'ரன் ராஜா ரன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.