உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆங்கிலம் சரளமாக பேச முடியவில்லை : லப்பர் பந்து சுவாசிகா கவலை

ஆங்கிலம் சரளமாக பேச முடியவில்லை : லப்பர் பந்து சுவாசிகா கவலை

லப்பர் பந்து வெற்றிக்குபின் மாமன் படத்தில் நடித்தார் சுவாசிகா.அந்த படமும் வெற்றி பெறவே இப்போது தமிழில் நிறைய படங்களில் நடித்து வருகிறார் சுவாசிகா. ஆனால், அவர் மனதில் ஆங்கிலம் சரியாக பேச முடியவில்லையே என்ற கவலை உள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ‛‛பள்ளிப்படிப்பு படிக்கும்போதே நடிக்க வந்துவிட்டேன். பின்னர், பகுதிநேரமாக பிளஸ் 2 முடித்துவிட்டு, டான்சில் டிப்ளமோ பெற்றேன். எனக்கு இன்னும் ஆங்கிலம் சரியாக பேச முடியவில்லையே என்ற கவலை இருக்கிறது. அப்போது கங்கனா ரணாவத்தை நினைத்துக் கொள்வேன். அவர் முதலில் ஹிந்தியில் அதிகம் பேசினார். பின்னர் ஆங்கிலத்துக்கு மாறினார். அந்த மாதிரி நானும் விரைவில் சரளமாக ஆங்கிலம் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் இவ்வளவு படங்களில் நடித்தாலும் ஸ்ரேயா, ஹன்சிகா போன்றவர்கள் இன்னமும் சரிவர தமிழ் பேசுவது இல்லை. ஆனால், கர்நாடகம், கேரளாவில் இருந்து வரும் ஹீரோயின்கள் சிறிது காலத்தில் தமிழில் பேச கற்று விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !