வெப் தொடரில் நடிக்கும் பிரியங்கா மோகன்!
ADDED : 46 days ago
'டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது அவர் கவின் நடிக்கும் ஒன்பதாவது படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் 'ஓஜி' என்ற படம் நாளை வெளியாகிறது. இந்த கேங்ஸ்டர் படத்தில் பவன் கல்யாணின் மனைவியாக கண்மணி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.
இந்த நிலையில் அடுத்தபடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி.,யில் வெளியாகும் ஒரு வெப் தொடரிலும் நடிக்க போகிறார் பிரியங்கா மோகன். அவர் முதல் முறையாக நடிக்க போகும் இந்த வெப் தொடரை ஒரு தமிழ் இயக்குனர் இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.