ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு
ADDED : 7 days ago
மலையாள சினிமாவின் கவர்ச்சி நடிகையான ஸ்வதோ மேனன், சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஸ்வேதா மேனன் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணத்துக்காக ஆபாசமாக நடித்ததாகவும், அக்காட்சிகளை சமூக ஊடகங்கள், ஆபாச தளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டியதாகவும் சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி என்பவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தடை உத்தரவை அடுத்த மாதம் 28ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.