வாசகர்கள் கருத்துகள் (1)
நல்ல படமா இருந்தால் தானா ஓடும் மக்கள் ரசித்து பார்ப்பார்கள். எவன் recommendation um தேவை இல்லை nu இவருக்கு தெரியாதா என்ன
சென்னையில் நடந்த 'இரவின் விழிகள்' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சங்க செயலாளர் பேரரசு ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்தார். அவர் பேசுகையில், ''இன்று படங்கள் வெற்றி பெறுவது குறைந்துவிட்டது. சினிமாவை அழிப்பது சுயநலம்தான். சினிமா நல்லா இருக்கணும் என்று தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் நினைக்கணும்.
சின்ன படங்கள் ஓடணும், புதுப்படங்கள் ஓடணும் என்ற விஷயத்தில் ரஜினிகாந்த்துக்கு ஒரு பார்வை உண்டு. அப்படிப்பட்ட படங்கள் ஓடினால், அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறார் ரஜினிகாந்த். அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அந்த படம் ஓட உதவி செய்கிறார். இப்போது அல்ல, முன்பே அவருக்கு அந்த குணம் உண்டு. தனது பட வெற்றிவிழாவில் சேரன் இயக்கிய 'பொற்காலம்' படத்தை பாராட்டி, அவருக்கு செயின் போட்டார். அப்படிப்பட்ட உள்ளம் அவருக்கு உள்ளது.
அவரை போல முன்னணி ஹீரோக்கள் தங்களுக்கு பிடித்த நல்ல படங்களை பாராட்டலாம். அவர்களை நேரில் அழைத்து பாராட்டாவிட்டால், அந்த படம் குறித்து ஒரு பதிவு போடலாம். அது படத்தை ஓட வைக்கும். நாம் சம்பாதித்துவிட்டோம், நாம் வளர்ந்துவிட்டோம் என நினைக்காமல் நல்ல புதுப்படங்களுக்கு ஆதரவு கொடுத்து, அதை ஓட வைக்கலாம். இப்போது பல படங்கள் நன்றாக இருக்கிறது என்று ரிசல்ட் வருகிறது. ஆனால், வசூல் இல்லை. ஆகவே, சினிமாவை வாழ வைக்க இதை சேவையாக பெரிய ஹீரோக்கள் செய்யலாம்'' என்றார்.
நல்ல படமா இருந்தால் தானா ஓடும் மக்கள் ரசித்து பார்ப்பார்கள். எவன் recommendation um தேவை இல்லை nu இவருக்கு தெரியாதா என்ன