நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன்
ADDED : 3 days ago
இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிஸி தம்பதியரின் மகள் நடிகை கல்யாணி. மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‛லோகா சாப்டர் 1' படம் சூப்பர் ஹிட் ஆனதுடன் ரூ.270 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று மலையாள சினிமாவில் அதிக வசூலை குவித்த படமாக மாறி உள்ளது.
‛வாழ்க்கை பற்றி என்னவென்று தெரிந்து கொள்ள தனது பெற்றோர் தன்னையும், தனது சகோதரனையும் வியட்நாமில் உள்ள அனாதை இல்லத்தில் ஒருவாரம் சேர்த்ததாக' கல்யாணி ஒரு பேட்டியில் கூறியதாக செய்தி பரவியது.
இதை மறுத்துள்ள கல்யாணி, ‛நான் அப்படி எதுவும் சொல்லவில்லை, அப்படி ஒரு சம்பவமும் நடக்கவில்லை. தேவையில்லாமல் இதுபோன்ற செய்திகளை பரப்பாதீர்கள்'' என தெரிவித்துள்ளார்.