உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு

என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு


துபாய், பெல்ஜியம் நாடுகளை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார் அஜித்குமார். இங்கு ‛அஜித்குமார் ரேஸிங்' சார்பில் நான்கு போட்டிகளில் பங்கேற்கிறார். இந்த மாதம் இரண்டு அடுத்த மாதம் இரண்டு என நான்கு போட்டிகள் அங்கு நடைபெறுகிறது.

இந்நிலையில் தற்போது அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவர்களது மகள் அனோஷ்கா ஆகியோர் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று அஜித்தை சந்தித்துள்ளார்கள். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஷாலினி. அதோடு, ‛எனது சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்' என்று ஒரு கேப்ஷனும் அவர் போட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும், இந்த கார் பந்தயத்தை அடுத்த மாதத்தோடு முடித்து விட்டு ஸ்பெயின் நாட்டிலிருந்து சென்னை திரும்புகிறார் அஜித் குமார். அதையடுத்து நவம்பர் மாதத்தில் இருந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜித் 64வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !