உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது!

பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது!


‛கல்கி 2898 ஏடி' படத்தை அடுத்து ‛கண்ணப்பா' என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபாஸ் தற்போது நடித்துள்ள படம் ‛தி ராஜா சாப்'. மாருதி இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஹாரர் காமெடி கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று தி ராஜா சாப் படத்தை தயாரித்திருக்கும் பீப்பிள் மீடியா நிறுவனம் செப்டம்பர் 29ம் தேதியான நாளை மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !