பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்
ADDED : 3 days ago
'யாத்திசை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தரணி சந்திரன் இயக்கும் அடுத்த படத்தை ஜே.கே.பிலிம் சார்பில் ஜே.கமலக்கண்ணன் தயாரிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் கூறியதாவது: சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்.
சசிகுமார் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு தன் நடிப்பால் கதாபாத்திரத்தையும் படத்தையும் மெருகேற்றியுள்ளார். என்றார்.