அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2!
ADDED : 3 days ago
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான படம் 'வார்- 2'. ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் காரணமாக 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 300 கோடி மட்டுமே வசூலித்தது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி ஹிந்தி, தெலுங்கு உள்பட பல மொழிகளில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிடுகிறார்கள். தியேட்டர்களில் எதிர்பார்த்தபடி வசூலிக்காத இந்த வார்-2 படம் ஓடிடியிலாவது வசூலிக்குமா? என்று அப்படக்குழு எதிர்பார்க்கிறது.