தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி!
தேசிய விருது பெற்ற கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, தற்போது 'காந்தாரா சேப்டர்-1' என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ள இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது ரிஷப் ஷெட்டி தனது தாய் மொழியாக கன்னடத்தில் உரையாற்றி இருக்கிறார். இது இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது கன்னட உரை குறித்து தெலுங்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 'நீங்கள் உங்கள் படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தும்போது தெலுங்கில் பேச முயற்சி செய்யுங்கள்' என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். என்றாலும் இதுவரை இதற்கு அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த நிகழ்ச்சியின்போது தனது நண்பரான ஜூனியர் என்டிஆர் குறித்து வெகுவாக பாராட்டி பேசி உள்ளார் ரிஷப் ஷெட்டி.