ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள்
தெலுங்கில் வஜ்ர வராஹி சினிமாஸ் சார்பில் சிவா சேர்ரி, ரவிகிரண் தயாரிக்கும் படம் 'ஹெய் லெசோ'. பிரசன்னா குமார் கோட்டா இயக்குகிறார். சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படம். 'கோர்ட்' படத்தில் வில்லனாக, நடித்த சிவாஜி, இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.
நடாஷா சிங், நக்ஷா சரண், அக்ஷரா கவுதா என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். அனுதீப் தேவ் இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. படம் குறித்து இயக்குனர் பிரசன்ன குமார் கூறியதாவது: 'ஹெய் லெசோ' என்பது விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல். படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுப்பதற்காக இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்து படம் தயாராகிறது. என்றார்.
“ஹெய் லெசோ” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.