தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
சென்னையில் நடந்த வீரத்தமிழச்சி படவிழாவில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன், தனது காதல் மனைவி, நடிகை தேவயானி குறித்து பேசியது பரபரப்பாகி உள்ளது. சுரேஷ் பாரதி இயக்கும் இந்த படத்தில் புதுமுக ஹீரோயின் சுஷ்மிதா விஜயசாந்தி ரேஞ்சுக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவரை தலைகீழாக தொங்கிவிட்டு, அவரை போலீஸ் அடிக்கும் காட்சிகளை கூட இயக்குனர் படமாக்கி உள்ளார்.
அந்த சீன் குறித்து பலரும் பேசியபோது மைக் பிடித்த ராஜகுமாரன், ''என் மனைவி தேவயானி புஷ்பம் மாதிரி அமைதியாக இருப்பார். ஆனால், அவர் அடித்தால் 2 டன் வெயிட். பொதுவாக பெண்கள் வீரம் மிக்கவர்கள். அடியில் பின்னி எடுத்துவிடுவார்கள். ஆனால், குடும்பம், குழந்தைகளுக்காக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்' என்று பேசினார்.
இந்த படத்தை இயக்கிய சுரேஷ்பாரதி கொத்தனாராக பணியாற்றியவர். சினிமா மீதான ஆர்வத்தில் படிப்படிப்பாக உயர்ந்து, யாரிடமும் பணியாற்றாமல் இந்த படத்தை இயக்கி உள்ளார். விஜய் நண்பர் சஞ்சீவ் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.