உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!


ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான படம் 'பிளாக்'. அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த அப்படம் டைம் லூப் கதையில் உருவாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது 'பாலிமி' என்ற மலையாளப் படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ் என்பவர் இயக்கத்தில் 'தலைவர் தம்பி தலைமையில்' என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. இது அவரது 45வது படமாகும்.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 'அகத்தியா' படத்திற்கு பிறகு ஜீவா இரண்டு வேடங்களில் இந்த படத்தில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !