நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
மலையாள திரையுலகில் பிரபல சீனியர் குணச்சித்திர நடிகர் சீனிவாசன். இவரது மகன்களான வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவருமே இயக்குனர்கள் மற்றும் நடிகர்களாக வலம் வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகர் தியான் சீனிவாசன் தனது தந்தையை போல நகைச்சுவை கலந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, நிவின்பாலி மலையாளத்தில் நடித்த 'லவ் ஆக்சன் ட்ராமா' என்கிற படத்தை இயக்கியது இவர்தான்.
ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் விவசாயத்திலும் இறங்கியுள்ளார் தியான் சீனிவாசன். கிட்டத்தட்ட 80 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2020ல் அவரது தந்தை சீனிவாசன் இயற்கை விவசாயம் குறித்து ஒரு துவக்கத்தை இவரிடம் ஏற்படுத்தி வைத்தபோது இரண்டு ஏக்கரில் நெல் விவசாயத்தை துவங்கிய தியான் சீனிவாசன் என்று 80 ஏக்கரில் பிரம்மாண்டமாக அதை செய்து வருகிறார்.