மேலும் செய்திகள்
லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு
47 minutes ago
காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம்
47 minutes ago
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் பான் இந்தியா படமாக நேற்று வெளியான படம் 'காந்தாரா சாப்டர் 1'. இப்படத்திற்கு கர்நாடகாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆந்திரா, தெலங்கானாவிலும் நன்றாகவே உள்ளது. தமிழகம், கேரளாவிலும் குறிப்பிடும்படியான வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். ஹிந்தியில் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் தகவல். கர்நாடக மலைவாழ் கலாச்சாராம் சார்ந்த படமாக இருப்பதால் அதை புரிந்து கொள்வதில் அவர்களுக்கு சிரமம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி முதல் நாள் வசூலாக 80 கோடி வசூல் நிச்சயம் கிடைத்திருக்கும். அது 100 கோடியைக் கடக்குமா என்பது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போது தெரிய வரும். படத்தின் முதல் பாதி மிகவும் சாதாரணமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியும், கடைசி அரை மணி நேரமும் தான் ரசிகர்களைக் வெகுவாகக் கவர்ந்துள்ளதாகத் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
47 minutes ago
47 minutes ago