உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு

லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் மோகன்லால், மீனாவின் இளைய மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் எஸ்தர் அனில். அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் கமலின் மகளாக நடித்த இவர், அதன் தெலுங்கு ரீமேக்கிலும் கூட தனது கதாபாத்திரத்தில் தானே நடித்திருந்தார். அதன் பிறகு வளர்ந்து பருவப்பெண்ணாக மாறிய எஸ்தர் அனில் தமிழில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான மின்மினி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் படிப்பையும் விடாமல் தொடர்ந்து வரும் எஸ்தர் அனில் மும்பையில் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் தனது இளநிலை படிப்பை முடித்துவிட்டு தற்போது லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்லூரியில் சுற்றுப்புறச் சூழல் குறித்த முதுகலை பட்டப்படிப்பு படிப்பதற்காக சேர்ந்திருந்தார்.. இந்தநிலையில் தற்போது வெற்றிகரமாக தனது மாஸ்டர் டிகிரியை முடித்துள்ள எஸ்தர் அனில், அதுகுறித்த தகவலை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !