யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள்
ADDED : 3 hours ago
காமராஜ் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரிலும், காந்தியின் கொள்கைகளை மையப்படுத்தி 'வெல்கம் பேக் காந்தி' என்ற பெயரிலும் தயாரித்த 'ரமணா கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம் கடைசியாக தயாரித்த படம் 'திருக்குறள்'. திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியிருந்த படம். முந்தைய படங்களை இயக்கிய ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கினார். தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இதனை இலவசமாக பார்க்கலாம்.
இதுகுறித்து இயக்குனர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் கூறம்போது “படம் வெளிவந்தபோது, நல்ல விமர்சனங்கள் வந்தன. ஆனால் திரையரங்குக்கு சரியான ஆட்கள் வரவில்லை. அதனால் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று யுடியூப்பில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்தோம். இப்படம் உலகம் முழுக்க போய் சேரும், காலம் கடந்து நிற்குமென நம்பிக்கை உள்ளது” என்றார்.