உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா

ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா


நடிகர் ராதிகா தாயார் கீதா சமீபத்தில் காலமானார். இந்நிலையில் தனது மகன் மனோஜ் மரணத்தை தொடர்ந்து வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலும், மலேசியாவில் உள்ள மகள் வீட்டிலும் ஓய்வெடுத்து வந்த பாரதிராஜா, ராதிகா வீட்டுக்கு சென்று அவர் தாயார் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவுக்கு நினைவு தப்பி விட்டது தன்னையே யார் என்று தெரியவில்லை என அவர் தம்பி ஜெயராஜ் பேட்டி கொடுத்திருந்த நிலையில் அது தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் ராதிகா வீட்டுக்கு சென்று தனது உடல்நிலை குறித்த பொய் செய்திகளையும் பாரதிராஜா தவிடு பொடி ஆக்கி உள்ளார். பாரதிராஜாவுடன் இருக்கும் போட்டோவை ராதிகா பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !