அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு!
ADDED : 14 hours ago
இயக்குனர் முத்தையா ‛குட்டிப் புலி, கொம்பன், மருது, விருமன்' போன்ற வெற்றிகளைப் படங்களை இயக்கியவர். முத்தையா இயக்கத்தில் வெளியான கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
கடந்த சில மாதங்களாக எந்தவொரு அறிவிப்பின்றி முத்தையா, அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். தற்போது அருள்நிதி, முத்தையா கூட்டணியில் உருவாகியுள்ள படத்திற்கு 'ராம்போ' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதில் தன்யா ரவிச்சந்திரன், அபிராமி, விடிவி கணேஷ், ஆயிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வருகின்ற அக்டோபர் 10ம் தேதியன்று ஒளிபரப்பாகிறது என குறிப்பிட்டு அறிவித்துள்ளனர்.