‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்!
ADDED : 1 days ago
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்காலிகமாக அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'. இதில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து முதல் பாடலை இவ்வருட தீபாவளி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தின் போது கரூரில் 41 பேர் பலியாகினர். இதனால் விஜய் மற்றும் அவரின் கட்சி குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனால் ஜனநாயகன் படத்தின் முதல் பாடலை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என படக்குழுவிடம் விஜய் கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.