உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ?

தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ?


2025 தீபாவளிக்கு, “பைசன், கார்மேனி செல்வம், டீசல், கம்பி கட்ன கதை, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, டியூட்” ஆகிய படங்கள் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, டியூட்' ஆகிய படங்களில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இரண்டு படங்களுமே தீபாவளிக்கு வெளியாகுமா அல்லது இரண்டில் ஒன்று தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் 'டியூட்' படம் தீபாவளிக்கு வருவது உறுதி செய்யும் விதத்தில் படத்தின் புரமோஷன் வேலைகளை தற்போது ஆரம்பித்துள்ளார்கள்.

நேற்று 'டியூட்' படத்தின் இயக்குனர் கீர்த்திஸ்வரன் பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவரிடம் இரண்டு பிரதீப் படங்களின் மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தங்களது படம் வருவது உறுதி என்றார் கீர்த்தி.

'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படத்தை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 'டியூட்' படம் வெற்றி பெற்றுவிட்டால் பிரச்சனையில்லை. மாறாக ஏதாவது நடந்தால் 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !