300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா'
ADDED : 9 minutes ago
டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியான படம் 'லோகா சாப்டர் 1 - சந்திரா'.
இப்படம் தற்போது 300 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 300 கோடி வசூல் சாதனை என்பது சாதாரண விஷயமல்ல. பட்ஜெட்டை விடவும் பத்து மடங்கு வசூல் சாதனை புரிந்துள்ளது. அதுவும் மலையாளத் திரையுலகத்தில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ள முதல் படம். தென்னிந்திய அளவில் ஒரு கதாநாயகி புரிந்த முதல் வசூல் சாதனையும் இதுதான். அது மட்டுமல்ல கேரளாவில் மட்டும் இப்படம் 120 கோடி வசூலையும் பெற்றுள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் இதற்கு முன்பு 'எல் 2 எம்புரான்' படம் 260 கோடி வசூலித்ததுதான் சாதனையாக இருந்தது. அதைக் கடந்த மாதமே இப்படம் கடந்தது.