உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி திடீர் இமயமலை பயணம்

ரஜினி திடீர் இமயமலை பயணம்


ரஜினி நடித்த 'கூலி' படம் வெளியாகி நல்ல வசூலையும் கொடுத்தது. அடுத்து அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவருகிறது.

ஒவ்வொரு படம் வெளியான பிறகு அடுத்த படம் தொடங்குவதற்கு முன்பு ரஜினி இமயமலைக்கு ஆன்மிக பயணம் செய்வது வழக்கம். உடல்நலக்குறைவாக இருந்த காலத்தில் மட்டும் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை.

'வேட்டையன்' படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். 'கூலி' படம் வெளியாகும் முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை.

இந்நிலையில் தற்போது ஒருவார கால பயணமாக இமயமலை சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற அவர், ரிஷிகேஷ் சென்று சேர்ந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் தங்கியிருக்கும் ரஜினி நாளை இமயமலை ஏறி பாபாவை தரிசித்து விட்டு திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !