உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார்


பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா. பிரபல பாலிவுட் இயக்குனர் சாந்தாராம் 1951ம் ஆண்டு இயக்கிய 'அமர் பூபாலி' என்ற மராட்டிய படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து சாந்தாராம் இயக்கிய ஹிந்தி, மராட்டி படங்களில் நடித்தார். அவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

'ஜனக் ஜனக் பாயல் பஜே', 'தீன் பத்தி சார் ரஸ்தா', 'தோ ஆங்கேன் பாரா ஹாத்', 'பிஞ்ச்ரா' ஆகியவை சந்தியா நடித்த முக்கியமான படங்கள். 94 வயதான சந்தியா முதுமை காரணமாக நேற்று மும்பையில் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !