300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி'
2025ம் ஆண்டின் அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ந்தது போன்ற ஒரு பாக்ஸ் ஆபீஸ் வசூல் இதற்கு முன்பு எந்த ஒரு வருடத்திலும் நடந்தது இல்லை. அதுவும் தென்னிந்திய மொழிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இது நடந்துள்ளது.
நேற்றைய வசூலுடன் மலையாளப் படமான 'லோகா சாப்டர் 1 சந்திரா', கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்கள் 300 கோடி வசூலைக் கடந்தன. அதுபோல தெலுங்குப் படமான 'ஓஜி' படமும 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. அடுத்தடுத்து இப்படி நடந்துள்ள பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
'ஓஜி' படம் 10 நாட்களில் இந்த வசூலைக் குவித்துள்ளது. இதன் மூலம் படத்தின் 'பிரேக் ஈவன்' நடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தந்த வெற்றியால் இதன் அடுத்த பாகத்திலும் நடிக்க பவன் கல்யாண் தயாராக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
2025ல் வெளியான தெலுங்குப் படங்களில் 'சங்கராந்திகி வஸ்துனம்' படத்தின் வசூலை முறியடித்து 'ஓஜி' படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.