உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம்

'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம்


நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக்.,17ல் ரிலீசாகிறது 'பைசன்' படம். அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிலீஸ் நெருங்கிவரும் சூழலில், படத்தை புரமோட் செய்யும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் துருவ் விக்ரம் பேசுகையில், ''நான் இதற்கு முன்பாக 2 படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்களா எனத் தெரியவில்லை. பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் பைசன் படத்தை நிச்சயம் பாருங்கள். இதுதான் என் முதல் படம் என்பேன். நீங்களும் அப்படி பார்ப்பீர்கள் என நம்புகிறேன். இந்த படத்திற்காக மொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்துள்ளது.

என்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன். இயக்குனர் மாரி செல்வராஜூம் ரொம்ப உழைத்து, கஷ்டப்பட்டு இறங்கி சம்பவம் பண்ணியிருக்காரு. அது எல்லோருக்கும் போய் சேரணும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், பாய் பிரண்ட், கேர்ள் பிரண்ட் என யாருக்கூட வேண்டுமானாலும் போய் படத்தை பாருங்கள்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !