பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து
ADDED : 38 minutes ago
ஆரம்பகாலத்தில் திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக இருந்தவர் காளிமுத்து. எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது திமுக.,வில் இருந்து பிரிந்து அவருடன் சென்றார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.
ஆனால் அவர் திரைப்படத்திற்கு பாடல் எழுதியது அதிகம் கவனிக்கப்படாத ஒன்று. காளிமுத்துவின் நெருங்கிய நண்பராக இருந்த இயக்குனர் மகேந்திரன் தான் இயக்கிய 'கண்ணுக்கு மை எழுது' என்ற படத்தில் அவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.
இந்த படத்தில் அன்புமலர்களின், தாம்பாள சுந்தரியே, வாடா மல்லியே, சோகங்கள் என்ற பாடல்களை அவர் எழுதினார். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாது.
பாட்டி, மகள், பேத்தியின் உறவை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் பானுமதி, சுஜாதா, வடிவுக்கரசி இவர்களுடன் சரத்பாபு நடித்திருந்தார். 1986ம் ஆண்டு வெளிவந்தது.