பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார்
தமிழில் வில்லனாக நடித்து வந்த நம்பியார், தெலுங்கிலும் நடித்தார். அவர் தெலுங்கில் நடித்த படங்களில் முக்கியமான படம் 'கண்ணா தல்லி'. இந்த படம் தமிழில் 'பெற்றதாய்' என்ற பெயரில் வெளியானது. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கினார்.
கடன் தொல்லையால் கைவிட்டுப்போன கணவன், ஊதாரித்தனமான மகன் இந்த இருவரையும் சமாளித்து ஒரு தாய் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் தாயாக ஜி.வரலட்சுமி நடித்தார். அவரது நல்ல மகனாக அக்னினேனி நாகேஸ்வரராவ் நடித்தார். கெட்ட மகனாக நம்பியார் நடித்தார்.
இந்த படத்தின் மூலம்தான் பி.சுசீலா பாடகியாக அறிமுகமானார். 'எதுக்கு அழைத்தாய் எதுக்கு' என்ற முதல் தமிழ் பாடலையும், 'ஏண்டக்கு பிச்சாவலு' என்ற தெலுங்கு பாடலையும் தனது முதல் பாடலாக பி.சுசீலா பாடினார். இந்த படம் தெலுங்கில் பெரிய வரவேற்பையும், தமிழில் சுமாரான வரவேற்பையும் பெற்றது.