பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம்
நடிகர் பிரசாந்த் 90, 2000 ஆரம்ப காலகட்டங்களில் முன்னனி நடிகராக வலம் வந்தவர். சில பிரச்னைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இருந்தாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். கடந்தாண்டு அவர் நடித்து வெளியான 'அந்தகன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் விரைவாக படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும், அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குபின் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் ஒரு படத்தில் நடிக்க போகிறார். இதற்கான பணிகள் நடக்கின்றன. மற்றொருபுறம் தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'கோர்ட் vs ஸ்டேட்' படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்க பிரசாந்த் ஆர்வமாக உள்ளாராம். இதற்காக அவர் மற்ற மொழி நடிகர்கள் சிலரிடம் பேசி வருகிறார். அது எந்த மாதிரியான படம் இயக்குனர், கதை உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.