நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம்
இயக்குனர் பாரதி கண்ணன் போக்சோ சட்டத்தில் கைது என தகவல் கசிந்தன. சில மீடியாக்களில் பாரதி கண்ணன் கைது என செய்தி வர, நான் அவனில்லை என்று விளக்கம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாரதிகண்ணன்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் அருவா வேலு, கண்ணத்தாள், திருநெல்வேலி, பண்ணாரி அம்மன், கரகாட்டக்காரி உள்ளிட்ட 10க்கும் அதிகமான இயக்கி உள்ளேன். நேற்று பாரதி கண்ணன் என்ற துணை நடிகர் பாலியல் வழக்கில் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு போலீசார் இது குறித்து தகவல் செய்தி அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் சிலர் பெயரை தவறாக புரிந்து கொண்டு என் போட்டோவுடன் செய்தி பிரசுரம் செய்து உள்ளனர். அது என் குடும்பத்தினருக்கு மன வருத்தம் கொடுத்துள்ளது. இதுவரை நான் வம்பு வழக்கில் சிக்கியது இல்லை. நான் வேறு, அந்த பாரதி கண்ணன் வேறு. அந்த வழக்கிற்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. செய்தியை தவறாக வெளியிட்டவர்களும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்'' என கூறியுள்ளார்.