உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு


நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிரித்தி ஷெட்டி நடிக்கும் ‛வா வாத்தியார்' படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படம் முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. சூர்யாவின் கங்குவா பட ரிலீஸ் பிரச்னைகள், பைனான்ஸ் விவரங்களால் இந்த பட ரிலீஸ் தாமதமானது. கார்த்தியும் அடுத்தடுத்த படங்களுக்கு சென்றார்.

இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி வா வாத்தியார் ரிலீஸ் ஆகிறது. இதில் எம்ஜிஆர் ரசிகராக போலீஸ் அதிகாரியாக கார்த்தி வருகிறார். நலன் குமாரசாமியின் ‛சூது கவ்வும்' படம் போல இதுவும் காமெடி கலந்த கதை என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !