உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட்

தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட்


சமீபத்தில் வந்த படங்களில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‛லோகா' படமும், ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‛காந்தாரா சாப்டர் 1' படமும் தமிழிலும் ஹிட். இந்த இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே தமிழ் படங்கள் அல்ல, டப்பிங் படங்கள். லோகா படக்குழுவும் சரி, காந்தாரா குழுவும் சரி, தமிழகம் வந்து படத்தை பற்றி பேசவில்லை. தமிழகத்தில் எங்கும் படத்தை புரமோட் செய்யவில்லை. படம் ஹிட்டானபின் நன்றி தெரிவிக்க வந்தது லோகா குழு. காந்தாரா அதை கூட செய்யவில்லை. ஆனாலும், இரண்டு படத்தையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

நல்ல படங்களுக்கு, சிறந்த கதைகளுக்கு பெரிய விளம்பரம் தேவையில்லை என்பதை இந்த படங்கள் உணர்த்தி உள்ளன. இதேபோல், கடந்த ஆண்டு வெளியான ‛மஞ்சம்மேல் பாய்ஸ்' படத்துக்கும், தமிழில் படக்குழு விளம்பரம் செய்யவில்லை. படம் ஹிட்டான பின்னரே சென்னை வந்து பேசினர். அதேபோல் தெலுங்கில் ஹிட்டான பவன்கல்யாணின் ‛ஓஜி' குழுவும், தென்னிந்தியாவில் ஹிட்டான ‛மகாஅவதார் நரசிம்மா' படக்குழுவும் சென்னையில் ஒரு ஈவன்ட் கூட நடத்தவில்லை. ஆனாலும், இந்த படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

ராமகிருஷ்ணன்
2025-10-09 10:52:00

இதற்கு காரணம் என்ன என்று யோசித்து பாருங்க. தமிழ் படங்களில் வரும் அரசியல் தலையீடு, ஜாதி, மத காட்சிகள், ஜாதி டைரக்டர்கள் எடுக்கும் கேவலமான படங்கள் தான். தமிழக ரசிகர்கள் தானாக வேற்று மொழி படங்களுக்கு மாறி விட்டனர்.


angbu ganesh, chennai
2025-10-14 09:30:06

ஆம் தமிழ் நாட்டுல ஒதுக்கப்பட்டோம்னு சொல்லி கேவலமா இல்லாத ஜாதி கொடுமையை பத்தி பேசி படம் எடுப்பானுங்க, இவனுங்கள ஒதுக்கி இருந்தா இப்படி படம் எடுப்பானுங்கலா ஆனா இவனுங்கதான் பெர்முடாஸ் போட்டுட்டு விலை உயர்ந்த கார்லா பவனி வரானுங்க என்னிக்கு இந்த டூயட் கேவலமான லவ் கனவு songs இல்லாமல் கதையை விறுவிறுப்பான எடுக்கறானுங்களோ அப்போதான் தமிழ் படங்கள் உருப்படும்