பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள்
இமயமலை பயணத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். பத்ரிநாத்தில் அவர் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன. சிம்பு நடிக்கும் ‛அரசன்' பட தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் படம் நன்றாக ஓட வேண்டும், எந்த தடையும் இல்லாமல் வளர வேண்டும் என்ற வேண்டுதலுடன் சிதம்பரம் நடராஜர் கோயில், வடலுார் சத்யஞானசபையில் தரிசனம் செய்தார் சிம்பு. பட வெற்றிக்காக டி.ஆரும் சென்னையில் அன்னதானம் செய்து இருக்கிறார்.
எல்ஐகே படம் தீபாவளி ரிலீசில் இருந்து தள்ளிப்போன நிலையில், திருவண்ணாமலை கோயிலில் மன அமைதியாக தரிசனம் செய்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ்சிவன். நடிகர் யோகிபாபுவும் திருவண்ணாமலையில் சில நாட்களுக்கு முன்பு சாமி கும்பிட்டார். கார்த்தி நடிக்கும் ‛மார்ஷல்' படத்துக்காக ராமேஸ்வரம் சென்று இருக்கும் பிரபு, ராமநாதசாமி கோயிலில் தரிசனம் செய்து இருக்கிறார்.