உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால்

இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால்


ராணுவத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக பல ராணுவ படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் மோகன்லால். அதன் காரணமாகவே கடந்த 2009ம் ஆண்டில் இந்திய தரைப்படை மோகன்லாலுக்கு லெப்டினென்ட் கர்னல் (துணைநிலை படை அதிகாரி) என்கிற பதவியை அளித்து கவுரவித்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் தற்போது வரை அந்த கவுரவத்துடன் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் ராணுவ யூனிபார்ம் அணிந்து கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. இதனைத் தொடர்ந்து மரியாதை நிமித்தமாக இந்திய ராணுவ தலைமை அதிகாரி உபேந்திரா திவேதியின் அழைப்பை ஏற்று அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார் மோகன்லால்.

இந்த சந்திப்பு குறித்து மோகன்லால் கூறும்போது, “இன்று, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, அவர்களால் ராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட பெருமை எனக்குக் கிடைத்தது, அங்கு ஏழு ராணுவத் தளபதிகள் முன்னிலையில் எனக்கு COAS பாராட்டு அட்டை வழங்கப்பட்டது.. கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இந்த அங்கீகாரத்தைப் பெறுவது மிகுந்த பெருமை மற்றும் நன்றியுணர்வின் தருணம். இந்த கர்வத்திற்கும் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கும் ஜெனரல் உபேந்திரா திவேதி, முழு இந்திய ராணுவம் மற்றும் பிராந்திய ராணுவத்தின் எனது தாய்ப் பிரிவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !