விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி!
தற்போது எச்.வினோத் இயக்கியுள்ள ‛ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,9ல் திரைக்கு வருகிறது. மேலும் இதுவே என்னுடைய கடைசி படம் என்று அறிவித்துள்ள விஜய், அடுத்தபடியாக முழு நேர அரசியலுக்கும் வந்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் அவர் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு கரூருக்கு செல்லாத விஜய், விரைவில் அங்கு செல்வதற்கு டிஜிபி அலுவலகத்தில் இன்றைய தினம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மரணம் அடைந்துள்ள நிலையில் இறுதி அஞ்சலி செலுத்த விஜயின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்று இருந்தார். அப்போது மீடியாக்கள் அவரிடத்தில், கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், ‛‛இப்போது நான் ஒருவரது இறப்புக்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் இது போன்ற கேள்வி கேட்கலாமா? ஏற்கனவே நாங்கள் அந்த சம்பவத்தினால் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளோம் '' என்று சற்று கோபமாக பதில் கொடுத்துள்ளார்.