திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா!
ADDED : 6 minutes ago
நடிகர் மோகன் இயக்கி நடித்த ‛அன்புள்ள காதலுக்கு' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கன்னட நடிகை பாவனா ரமண்ணா. அதன் பிறகு தமிழில் ‛விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு' என பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 40 வயதாகும் நடிகை பாவனா ரமண்ணா இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில், சமீபத்தில் ஐவிஎப் முறையில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் அப்படி பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளது. இந்த சோக செய்தியை வெளியிட்டுள்ளார் நடிகை பாவனா ரமண்ணா.