சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்!
ADDED : 5 minutes ago
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு முதன் முதலாக நடிக்கப் போகும் படம் ‛அரசன்'. வடசென்னை கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அரசன் என்று தலைப்பு வைத்திருப்பதாக நேற்று ஒரு போஸ்டர் அறிவித்தார்கள். மேலும், கடந்த வாரத்திலேயே இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று இந்த அரசன் படத்தில் நடிக்க சாய் பல்லவி மட்டுமின்றி சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரையும் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.