புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன்
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். அதன் பிறகு தற்போது ‛ஜீனி, மார்ஷல்' போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‛லோகா சாப்டர்-1' என்ற படம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி திரைக்கு வந்து 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருக்கிறது. லோகா படத்தில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு பல பாலிவுட் நடிகைகளும் பெருமையாக பேசி இருந்தார்கள்.
இந்த நிலையில் லோகா படத்தின் வெற்றி மூலம் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு குறித்து கல்யாணி பிரியதர்ஷன் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‛‛லோகா படத்தின் மூலம் இந்திய அளவில் நான் கவனம் பெற்று விட்டேன். இது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. என்றாலும் இந்த வெற்றி, புகழ்ச்சியை நான் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து சினிமாவுக்காக கடினமான உழைப்பை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். இன்னும் நிறைய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என தெரிவித்திருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.