உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே!

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே!


தமிழில் ‛பீஸ்ட், ரெட்ரோ' படங்களுக்கு பிறகு ரஜினியின் ‛கூலி' படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டே, தற்போது ‛ஜனநாயகன்' படத்தை அடுத்து ‛காஞ்சனா-4' படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

ரவி நெலகுடிட்டி என்பவர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு பூஜா ஹெக்டே அதிகப்படியான சம்பளம் கேட்பதாகவும், அதனால் அவரை தயாரிப்பாளர்கள் தவிர்த்து வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கும் இந்த படத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் பூஜா ஹெக்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !