உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி

பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி

இன்றைய அரசியல் சூழ்நிலையில் வாரிசு அரசியல் விமர்சனத்திற்கு அதிகம் ஆளாகி இருப்பது கருணாநிதி குடும்பம். அவரது மகன் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வராக இருக்கிறார். பேரன் உதயநிதி துணை முதல்வராக இருக்கிறார். மகள் கனிமொழியும் தேசிய அரசியலில் இருக்கிறார்.

ஆனால் இதே கருணாநிதி, 'திரும்பிப்பார்' படத்தில் வாரிசு அரசியலை கிண்டல் செய்து அனல் பறக்கும் வசனங்களை எழுதினார். நேருவின் மகள் இந்திரா அரசியல் வாரிசாக வந்ததை மிக கடுமையாக இந்த படத்தில் விமர்சித்தார். இந்த படம் நேருவிற்கு போட்டுக் காட்டப்பட்டபோது 'இது முட்டாள்தனமான செயல்' என்று குறிப்பிட்டாராம்.

பராசக்தி படத்திற்கு பிறகு சிவாஜி நெகட்டிவ் கேரக்டரில், அதுவும் பெண் பித்தனாக நடித்த படம் 'திரும்பிப்பார்'. சிவாஜியுடன் நரசிம்ம பாரதி, துரைராஜ், தங்வேலு, பண்டரிபாய், கிரிஜா, கிருஷ்ணகுமாரி உள்ளிட்ட பலர் நடித்தார்கள். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !