இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா?
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பாணியில் சினிமா துறைக்கு வந்துள்ளார் இன்பன் உதயநிதி. இப்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். தனுஷ் நடித்த இட்லிகடை படத்தை வெளியிட்டார். அடுத்து பராசக்தி உள்ளிட்ட பல படங்களை வெளியிட உள்ளார். இப்போது அவர் ஹீரோ ஆகப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அவர் குடும்பத்தில் அப்பா ஹீரோ, முதல்வர் ஸ்டாலின் சில படங்களில் நடித்துள்ளார். கருணாநிதி திரையில் தோன்றி பேசியுள்ளர். சில நாடகங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நாலாவது தலைமுறையாக இன்பன் உதயநிதி நடிக்கப்போகிறார்.
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். அவருக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல். உதயநிதி நடித்த கடைசி படமான ‛மாமன்னன்' படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இப்போது இன்பன் அறிமுகம் ஆகும் படத்தை இயக்க உள்ளார் என தகவல். இப்போது பைசன் படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். தீபாவளிக்கு படம் ரிலீஸாகிறது. அடுத்து தனுஷ் படத்தை இயக்க உள்ளார். இன்பன் உதயநிதி படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.