பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு
ADDED : 27 minutes ago
ரஜினி நடித்த ‛கூலி' படம் திரைக்கு வந்து 600 கோடி வசூலை நெருங்கியது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர் 2'வில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இடைவெளி விட்டு நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்டு ஒருவார கால பயணமாக இமயமலை சென்றுள்ளார் ரஜினி.
சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் சில தினங்களுக்கு முன் சென்ற ரஜினி முதலில் ரிஷிகேஷ் சென்றார். பின்னர் அங்குள்ள ஆசிரமத்தில் தங்கிய ரஜினி பத்ரிநாத் கோவிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து இமயமலைக்கு பயணித்த ரஜினி அங்குள்ள மலைப்பாதைகளை நடந்தே சென்று பாபாஜி குகையில் பூஜை செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து பாபா குகையில் தியானமும் மேற்கொண்டார். பின்னர் பாபாஜி ஆசிரமத்திற்கும் சென்று ஓய்வெடுத்தார்.
இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகின.