இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி
ADDED : 45 days ago
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்தார். அப்போது மும்பையில் உள்ள பாலிவுட்டின் பிரபல யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டுடியோவுக்கு வந்த அவர் அங்கே ஒரு திரைப்படம் ஒன்றையும் பார்த்து ரசித்தார்.
இந்த நிகழ்வின் போது பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும் யஷ் ராஜ் பிலிம்ஸ் அக்ஷய் விதானியும் அவருடன் இருந்தனர். அவரது இந்த வருகையை தொடர்ந்து யஷ் ராஜ் பிலிம்ஸ் தனது 20 வது வருட நிறைவை கொண்டாடும் விதமாக வரும் 2026ல் இங்கிலாந்துடன் இணைந்து கூட்டு தயாரிப்பில் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.