டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூலும் நன்றாக இருக்கிறது.
இந்த நிலையில் காந்தாரா 2 படக்குழுவினர் ரிஷப் ஷெட்டி தலைமையில் டில்லி முதல் முதலமைச்சர் ரேகா குப்தாவை நேரில் சந்தித்துள்ளனர். காந்தாரா சாப்டர் 1 படத்தை பார்த்த முதல்வர் ரேகா குப்தா அந்த படம் குறித்தும் இந்தியாவின் ஆன்மிக கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக அது படமாக்கப்பட்ட விதம் குறித்தும் சிலாகித்து பாராட்டியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ள ரிஷப் ஷெட்டி கூறும்போது, “டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா காந்தாரா சாப்டர் 1 படம் பார்த்துவிட்டு எங்களை அழைத்து பாராட்டியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அவரது பாராட்டுக்கள் இதுபோன்று இன்னும் மன் மணம் சார்ந்த படங்களை எடுப்பதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.