ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு
ADDED : 23 minutes ago
கங்குவா, ரெட்ரோ படங்களை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராக உள்ள படம் கருப்பு. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என இன்னும் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் நடித்து வரும் படத்தின் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் சூர்யா. அவரது 46வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு கிழக்கு ஐரோப்பிய நாடான பெலராஸில் நடைபெற்று வருகிறது. அங்கே ஒரு சண்டைக் காட்சியையும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்க திட்டமிட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் முக்கிய இடங்களில் ரவீணா டான்டன், ராதிகா சரத்குமார் மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.